POSTERKAARAN CREATOR PROGRAM

உங்கள் தமிழ் டிசைன்களில் இருந்து சம்பாதியுங்கள்

நீங்கள் தமிழ் போஸ்டர், அழைப்பிதழ், வாழ்த்து அல்லது business poster டிசைன் செய்பவரா? PosterKaaran Creator Program-ல் உங்கள் templates-ஐ வெளியிடுங்கள். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட PosterKaaran பயனர்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு royalty கிடைக்கும்.

English: Design Tamil poster templates, publish them in PosterKaaran, and earn a monthly royalty when people use them. Apply with three original sample designs.

PosterKaaran mascot

PosterKaaran Creator Program என்றால் என்ன?

PosterKaaran-ல் மக்கள் திருமண அழைப்பிதழ், கண்ணீர் அஞ்சலி, கடை திறப்பு, அரசியல் போஸ்டர், வாழ்த்து போன்ற தமிழ் templates-ஐ திறந்து, தங்கள் பெயர், புகைப்படம் மாற்றி பயன்படுத்துகிறார்கள். Creator Program மூலம் அந்த templates-ஐ நீங்களே டிசைன் செய்யலாம். உங்கள் template approve ஆகி வெளியானதும், அது app மற்றும் website-ல் “Designed by @உங்கள்பெயர்” என்று உங்கள் பெயருடன் காட்டப்படும்.

மூன்று முக்கிய விஷயங்கள்: சேருவது இலவசம் · copyright உங்களிடமே இருக்கும் · மக்கள் உண்மையாக பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப மாதந்தோறும் royalty.

யார் சேரலாம்?

  • 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
  • தமிழ் போஸ்டர் மற்றும் அழைப்பிதழ் டிசைனில் அனுபவம் உள்ளவர்கள் — graphic designers, printing press டிசைனர்கள், freelancers, மாணவர்கள்.
  • உங்கள் சொந்த original designs மட்டும் submit செய்ய வேண்டும். Canva, Freepik அல்லது வேறு app-களில் இருந்து copy செய்த designs ஏற்கப்படாது.
  • ஒருவருக்கு ஒரு creator account மட்டும்.
1

Creator site-ல் Google மூலம் sign in செய்யுங்கள்

SIGN IN

design.posterkaaran.com/creator திறந்து Sign in with Google அழுத்துங்கள். PosterKaaran-ல் நீங்கள் பயன்படுத்தும் அதே Google account-ஐ பயன்படுத்துங்கள்.

PosterKaaran Creators website முகப்பு
PosterKaaran Creators தளம்: program எப்படி வேலை செய்கிறது, சம்பாதிக்கும் வழிகள், விதிமுறைகள்.
2

மூன்று original sample designs உருவாக்குங்கள்

3 SAMPLES

Application பக்கத்தில் Make a new design அழுத்தினால் PosterKaaran editor creator mode-ல் திறக்கும். Blank canvas-ல் இருந்து டிசைன் செய்யுங்கள். Creator mode-ல் Pro fonts மற்றும் assets இலவசமாகக் கிடைக்கும். டிசைன் முடிந்ததும் Use as sample அழுத்தினால் நேராக உங்கள் application-க்கு திரும்பி வரும்.

Samples-ஐ உங்கள் சிறந்த வேலையாகத் தேர்ந்தெடுங்கள். வெவ்வேறு வகைகள் (உதா: ஒரு திருமண அழைப்பிதழ், ஒரு கடை போஸ்டர், ஒரு பண்டிகை வாழ்த்து) இருந்தால் உங்கள் திறமையை reviewer எளிதாகப் புரிந்துகொள்வார்.
PosterKaaran editor creator mode-ல் Use as sample button
Creator mode: மேலே banner, canvas-ல் preview watermark, Export-க்கு பதிலாக “Use as sample”.
Sample design-க்கு title, category, hashtags சேர்க்கும் dialog
ஒவ்வொரு sample-க்கும் title, category, hashtags. விரும்பினால் “Suggest as Pro”.
3

Profile மற்றும் Creator Terms

PROFILE

Username (templates-ல் “Designed by @username” என்று வரும்), display name, சிறிய bio மற்றும் நீங்கள் டிசைன் செய்யும் மொழிகளைச் சேர்க்கவும். பிறகு Creator Terms-ஐ முழுமையாகப் படித்து ஏற்றுக்கொள்ளுங்கள்: original work, copyright, வருமானம், payout விதிகள் அனைத்தும் அதில் உள்ளன.

Creator application form: profile, samples, terms
Application form (test account மாதிரி): profile, மூன்று samples, Creator Terms.
4

Application அனுப்பி முடிவுக்காக காத்திருங்கள்

REVIEW

Send application அழுத்திய பிறகு PosterKaaran குழு உங்கள் samples-ஐ review செய்யும். முடிவு email, notification மற்றும் உங்கள் creator space-ல் தெரிவிக்கப்படும். Application ஏற்கப்படவில்லை என்றால் காரணமும், மீண்டும் apply செய்யக்கூடிய தேதியும் காட்டப்படும்.

Approve ஆன பிறகு templates சேர்ப்பது எப்படி?

Approved creators-க்கு My creator space திறக்கும். அங்கே Submit a design → Make a new design அழுத்தி புதிய template உருவாக்கி Submit for review அழுத்துங்கள். Reviewer அதை:

  • Approve & publish: Free அல்லது Pro template-ஆக app-ல் உடனே வெளியிடலாம்,
  • Request changes: என்ன மாற்ற வேண்டும் என்று குறிப்பு கொடுக்கலாம். அதே design-ஐ திருத்தி “Submit a fixed version” அனுப்பலாம்,
  • Reject: காரணத்துடன் நிராகரிக்கலாம்.
Reviewer changes requested குறிப்பு
“Changes requested”: reviewer குறிப்பும் “Submit a fixed version” button-உம்.

Approve ஆக அதிக வாய்ப்புள்ள templates எப்படி இருக்க வேண்டும் என்பதை Template design guidelines பக்கத்தில் விரிவாகப் பாருங்கள்.

வருமானம் எப்படி வரும்?

ஒவ்வொரு மாதமும் PosterKaaran-ன் net Pro subscription வருமானத்தில் ஒரு பங்கு creator royalty pool ஆக ஒதுக்கப்படும். அந்த pool, ஒவ்வொரு creator-ன் templates எவ்வளவு உண்மையாக பயன்படுத்தப்பட்டன என்பதைப் பொறுத்து பிரிக்கப்படும். Pro subscribers பயன்படுத்தும்போது அதிக points கிடைக்கும். உங்கள் creator space-ல் ஒவ்வொரு template-க்கும் எத்தனை uses, points, royalty என்பதைப் பார்க்கலாம். Balance payout threshold-ஐ அடைந்ததும் பணம் அனுப்பப்படும்.

முழு விளக்கம்: PosterKaaran creator royalties எப்படி கணக்கிடப்படுகின்றன?

முக்கிய விதிமுறைகள் (சுருக்கம்)

  • உங்கள் சொந்த design மட்டும். உரிமை இல்லாத photos, fonts, logos, celebrity படங்கள் கூடாது.
  • உங்கள் சொந்த templates-ஐ நீங்களே அல்லது உங்களுடன் தொடர்புடைய accounts மூலம் export செய்வது கணக்கில் வராது. போலியான usage கண்டறியப்பட்டால் அந்த வருமானம் நீக்கப்படும்.
  • நிலையான வருமானம் எதுவும் உத்தரவாதம் இல்லை.
  • முழு விதிமுறைகள் application பக்கத்தில் உள்ள Creator Terms-ல் உள்ளன.

உங்கள் முதல் template-ஐ இன்றே டிசைன் செய்யுங்கள்

Google மூலம் sign in செய்து, மூன்று original samples உடன் apply செய்யுங்கள்.

Creator Program-க்கு Apply செய்ய

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Creator Program-ல் சேர கட்டணம் உண்டா?

இல்லை. Apply செய்வதும், templates submit செய்வதும் இலவசம். Approved creators-க்கு editor-ல் Pro வசதிகளும் இலவசமாக கிடைக்கும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்?

நிலையான தொகை உத்தரவாதம் இல்லை. மக்கள் உங்கள் templates-ஐ எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் மற்றும் அந்த மாத Pro வருமானம் எவ்வளவு என்பதைப் பொறுத்து royalty மாறும். கணக்கீட்டு முறையைப் பாருங்கள்.

Application reject ஆனால் மீண்டும் apply செய்யலாமா?

ஆம். காத்திருப்பு காலம் முடிந்த பிறகு புதிய samples உடன் மீண்டும் apply செய்யலாம். அந்த தேதி உங்கள் creator space-ல் காட்டப்படும்.

என் template-ன் copyright யாருக்கு?

உங்களிடமே இருக்கும். PosterKaaran app மற்றும் website-ல் அதை வழங்க non-exclusive licence மட்டுமே கொடுக்கிறீர்கள்.

Mobile-ல் மட்டும் டிசைன் செய்யலாமா?

Creator mode web editor-ல் உள்ளது. Mobile browser-லும் திறக்கலாம், ஆனால் விரிவான டிசைனுக்கு laptop அல்லது desktop பரிந்துரைக்கப்படுகிறது.

Creator-களுக்கான மற்ற பக்கங்கள்