1. முழு design-உம் editable ஆக இருக்க வேண்டும்
இதுவே மிக முக்கியமான விதி. பெயர், தேதி, ஊர், வாசகம் போன்ற மாறும் விஷயங்கள் ஒவ்வொன்றும் தனி text layer-ஆக இருக்க வேண்டும். Photoshop அல்லது வேறு app-ல் முடித்த poster-ஐ ஒரே image-ஆக upload செய்தால் பயனர் எதையும் மாற்ற முடியாது.
- Text-ஐ படத்துக்குள் “burn” செய்யாதீர்கள். Editor-ன் Text tool மூலம் எழுதுங்கள்.
- Photo இடங்கள்: பயனர் தன் photo-வை மாற்றக்கூடிய தனி image layer-ஆக வையுங்கள்.
- Background, decorations: stickers, shapes, backgrounds தனித்தனி layers-ஆக இருந்தால் பயனர் நிறம், இடம் மாற்றலாம்.

2. உங்கள் சொந்த original work மட்டும்
பயன்படுத்தலாம்
- நீங்களே உருவாக்கிய layouts மற்றும் artwork
- PosterKaaran editor-ல் உள்ள fonts, stickers, shapes, backgrounds
- உங்களுக்கு உரிமை உள்ள photos
பயன்படுத்தக்கூடாது
- Canva, Freepik, Envato அல்லது வேறு app-களில் இருந்து copy / trace செய்த designs
- உரிமை இல்லாத photos, fonts, icons
- Celebrity, அரசியல் தலைவர்கள், தெரிந்த நபர்களின் படங்கள் (அனுமதி இல்லாமல்)
- Brand logos, trademarks; வேறு creator-ன் வேலை
அரசியல் மற்றும் மதம் சார்ந்த designs சட்டத்தையும் PosterKaaran content guidelines-ஐயும் மதித்தால் மட்டுமே ஏற்கப்படும்: வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டக்கூடாது, எந்தக் கட்சி அல்லது அமைப்பின் பெயரில் போலியாக இருக்கக்கூடாது.
3. Mobile-ல் படிக்கக்கூடிய தமிழ் எழுத்து
- பெரும்பாலான பயனர்கள் mobile-ல் பார்க்கிறார்கள். முக்கிய வரிகள் சிறிய திரையிலும் தெளிவாகப் படிக்க வேண்டும்.
- Heading-க்கு decorative font பயன்படுத்தலாம்; பெயர், தேதி, முகவரி போன்ற விவரங்களுக்கு எளிதாகப் படிக்கக்கூடிய font பயன்படுத்துங்கள்.
- தமிழ் spelling மற்றும் இலக்கணத்தை இருமுறை சரிபார்க்கவும். பிழை உள்ள template மாற்றம் கேட்கப்படும்.
- Placeholder text அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் (“மணமகன் பெயர்”, “தேதி: 00.00.2026”), பயனருக்கு எதை மாற்ற வேண்டும் என்று புரியும்.
- நீளமான பெயர்கள் வந்தாலும் layout உடையாதபடி text-க்கு இடம் விடுங்கள்.
4. சரியான size மற்றும் மக்கள் தேடும் categories
WhatsApp status, Instagram post / portrait / story, A4 print போன்ற பொதுவான sizes-ல் design செய்யுங்கள். Blank canvas தேர்வு செய்யும்போதே size முடிவாகிவிடும். அதிகம் பயன்படுத்தப்படும் categories-ல் நல்ல templates-க்கு அதிக uses கிடைக்க வாய்ப்பு உண்டு:
திருமண அழைப்பிதழ் · கண்ணீர் அஞ்சலி · பிறந்தநாள் · கடை திறப்பு · புதுமனை புகுவிழா · அரசியல் · பண்டிகை வாழ்த்துகள் · business விளம்பரங்கள்.
5. Title, category, hashtags சரியாக
- Title (3–100 எழுத்துகள்): என்ன design, யாருக்கு என்று தெளிவாக. உதா: “பொங்கல் வாழ்த்து – குடும்பத்திற்கு”.
- Category: பயனர் அந்த template-ஐ எங்கே தேடுவார்களோ அந்த category.
- Hashtags (1–10): மக்கள் தேடும் வார்த்தைகள், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும். உதா: #pongal #பொங்கல் #wishes.

6. Free அல்லது Pro?
Submit செய்யும்போது “Suggest as Pro” என்று பரிந்துரைக்கலாம்; இறுதி முடிவு PosterKaaran-னுடையது. Pro templates-ஐ Pro subscribers மட்டுமே பயன்படுத்துவார்கள், அதனால் அவற்றின் ஒவ்வொரு use-உம் அதிக points பெறும்; Free templates அதிக பேரைச் சென்றடையும் (points பற்றி). பொதுவாக அதிக விவரம், அழகான finishing, premium தோற்றம் கொண்ட designs Pro-வுக்கு ஏற்றவை.
பொதுவாக reject அல்லது “changes requested” ஆகும் காரணங்கள்
- முழு design ஒரே image; editable text இல்லை.
- வெறும் ஒரு வரி text, ஒரே நிற background: முழுமையான design இல்லை.
- வேறு இடத்தில் இருந்து copy செய்தது, அல்லது உரிமை இல்லாத படங்கள்.
- தமிழ் spelling பிழைகள், mobile-ல் படிக்க முடியாத சிறிய எழுத்து.
- தவறான category, அல்லது title / hashtags design-க்கு பொருந்தவில்லை.
- ஏற்கனவே submit செய்த அதே design மீண்டும் (ஒரு design-க்கு ஒரு submission மட்டும்).
“Changes requested” வந்தால் reviewer குறிப்பைப் படித்து, அதே design-ஐ Edit செய்து Submit a fixed version அனுப்புங்கள்.
Submit செய்வதற்கு முன் checklist
- பெயர், தேதி, வாசகம் ஒவ்வொன்றும் தனி text layer. Editor-ல் click செய்து மாற்ற முடிகிறது.
- Photo இடம் தனி layer; பயனர் தன் photo-வை வைக்க முடியும்.
- எல்லா படங்கள், fonts, artwork உங்களுடையவை அல்லது editor-ல் உள்ளவை.
- தமிழ் spelling சரிபார்க்கப்பட்டது; mobile preview-ல் படிக்க முடிகிறது.
- நீளமான பெயர் போட்டாலும் layout உடையவில்லை.
- Title, சரியான category, 3–6 பொருத்தமான hashtags தயார்.
- இது புதிய design, இதற்கு முன் submit செய்யாதது.
உங்கள் அடுத்த template-ஐ டிசைன் செய்யுங்கள்
இன்னும் creator ஆகவில்லையா? மூன்று original samples உடன் apply செய்யுங்கள்.
Creator Program-க்கு Apply செய்யஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரே photo-வாக உள்ள poster-ஐ template-ஆக submit செய்யலாமா?
இல்லை. Text தனி editable layers-ஆக இருக்க வேண்டும். முழு design ஒரே image-ஆக இருந்தால் reviewer-க்கு “No editable text” எச்சரிக்கை காட்டப்படும்.
Internet-ல் கிடைக்கும் photos பயன்படுத்தலாமா?
உரிமை இல்லாத photos, celebrity அல்லது அரசியல் தலைவர்களின் படங்கள், brand logos கூடாது. Editor-ல் உள்ள assets மற்றும் உங்கள் சொந்த artwork பயன்படுத்துங்கள்.
Template reject ஆனால் என்ன செய்வது?
Reviewer குறிப்பைப் படித்து design-ஐ மேம்படுத்தி புதிய submission அனுப்பலாம். “Changes requested” என்றால் அதே design-ஐ திருத்தி “Submit a fixed version” அனுப்பலாம்.
